குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் கவின், லாஸ்லியா? வனிதா அதிரடி பேச்சு

தனியார் தொலைக்காட்சியில் ஒளிபரப்பு ஆன நிகழ்ச்சி பிக் பாஸ். அதில் போட்டியாளர்களாக கலந்து கொண்டவர்கள் கவின் மற்றும் லாஸ்லியா. நடிகர் கவினை நாம் பல தொடர்களில் பார்த்திருப்போம். ஆனால் லாஸ்லியா முதன் முறையாக இலங்கையில் இருந்து வந்து நிகழ்ச்சியில் கலந்து கொண்டார்.

இவர்கள் இருவருக்கும் இடையில் பல விதமான சர்ச்சைகள் ஏற்பட்டதையும் நாம் நிகழ்ச்சியில் பார்த்து தெரிந்து கொண்டோம்.

மேலும் அதே நிகழ்ச்சியின் மூலம் மீண்டும் திரையுலகில் தன்னை ரீ என்ட்ரி செய்து கொண்டார் வனிதா விஜயகுமார். இதன்பின் அதே தொலைகாட்சியில் ஒளிபரப்பப்பட்ட குக்கு வித் கோமாளி நிகழ்ச்சியிலும் கலந்து கொண்டு முதல் இடத்தை பிடித்து வெற்றி பெற்றார் வனிதா.

இதற்காக அண்மையில் பேட்டி அளித்துள்ளார், அந்த பேட்டியில் குக்கு வித் கோமாளி நிகழ்சிக்கும் பிக் பாஸ் நிகழ்சிக்கும் என்ன வித்யாசம் என்று கேள்வி எழுந்தது. அப்போது அதற்கு பதிலளித்த இவர் “பிக்பாஸ் நிகழ்ச்சி ஒரு வித்தியாசமான ஒன்று, அங்கே வந்த போட்டியாளர்களும் அங்கே நடந்த விஷயங்கள் வேறு. அந்த நிகழ்ச்சியையும் குக்கு வித் கோமாளியையும் ஒப்பிட முடியாது. ஆனால் ஒருவேளை அதே நிகழ்ச்சியில் வந்த ஷெரின், தர்ஷன், கவின், லாஸ்லியா,போன்றவர்களை வைத்து நீங்கள் குக்கு வித் கோமாளி நிகழ்ச்சியை நடத்தி இருந்தால். அந்த நிகழ்ச்சியின் கெமிஸ்ட்ரி வேற மாதிரி தான் இருந்திருக்கும்”.

மேலும் பேசிய இவர் “குக்கு வித் கோமாளி நிகழ்ச்சியில் யாரும் பொய் சொல்ல வேண்டும், நடிக்க வேண்டும் ,சீன் போட வேண்டும் என்ற அவசியம் இல்லை அந்த நிகழ்ச்சியில் சமையலில் மட்டும்தான் கவனம் செலுத்துவோம்” என்று கூறியுள்ளார்.

முகநூலில் நாம்