கிழக்கு மாகாணத்தை ஆளுநர் நாசப்படுத்தியுள்ளார் – சாணக்கியன்

கிழக்கு மாகாண ஆளுநர் கிழக்கு மாகாணத்தை நாசப்படுத்தியுள்ளார். இவரது
செயற்பாடுகள் கிழக்கு மாகாணத்தில் பால் உற்பத்தி தொழிற்துறையை முழுமையாக
பாதிப்புக்குள்ளாக்கியுள்ளது,

ஆகவே இவ்விடயம் குறித்து விசேட கவனம் செலுத்துமாறு தமிழ் தேசிய
கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் சாணக்கியன் இராசமாணிக்கம்
விவசாயத்துறை அமைச்சரிடம் கோரிக்கை விடுத்தார்.

மட்டக்களப்பு மாவட்டத்தில் ஒருசில பகுதிகள் மேய்ச்சல் நிலங்கள் என இதுவரை
வர்த்தமானி வெளியிடப்படவில்லை.

வியத்மக அமைப்பின் உறுப்பினரான கிழக்கு மாகாண ஆளுநர் கிழக்கு மாகாணத்தை
முழுமையாக நாசப்படுத்தியுள்ளார். இந்த மேய்ச்சல் நில பிரச்சினை தொடர்பில்
கிழக்கு மாகாண ஆளுநர் முறையாக செயற்படவில்லை.  எனவும் அவர்
தெரிவித்துள்ளார்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

முகநூலில் நாம்