கிளிநொச்சி வைத்தியசாலைக்கு வாகனம் அன்பளிப்பு

கிளிநொச்சி மாவட்டத்தில்; கொரேனா மரணங்கள் அதிகரித்து வருகின்ற நிலையில் சடலங்களை வவுனியா மின்தகன நிலையத்துக்கு எடுத்துச் செல்வதற்கு கொடைச்செம்மல் திருவாளர் கதிர்காமநாதன் (எஸ்.கே.நாதன்) அவர்கள் வாகனம் ஒன்றினை அன்பளிப்புச் செய்துள்ளார். வாகனத்துக்கான எரிபொருட் செலவு, சாரதியின் சம்பளம் மற்றும் பராமரிப்பு செலவுகளையும் அவரே பொறுப்பேற்றுக்கொண்டுள்ளார்.

கடந்த சில நாள்களாக கிளி மாவட்டப் பொது வைத்தியசாலையில் கொரோனாவினால் மரணிப்பவர்களின் சடலங்கள் தேங்கும் நிலை ஏற்பட்டுள்ளது.


கிராமங்களிலிருந்து உடல்களை சேகரிப்பதற்கும் சட்ட மருத்துவ நடைமுறைகளின் பின்னர் அவற்றை மின்தகனம் செய்வதற்காக வவுனியா கொண்டு செல்வதற்குமாக நோயாளர் நலனபுரிச்சங்கத்தின் ஒரேயொரு அமரர் ஊர்தி மாத்திரம் சேவையில் ஈடுபட்டது. வினைத்திறனான உடலங்களின் பரிமாற்றத்தினைக் கருத்திற்கொண்டு நேற்றுமுன் தினம் தொடக்கம் புதிய வாகனமொன்றும் சேவையில் இணைக்கப்பட்டது.


கிளிநொச்சி மருத்துவ சங்கத்தின் கோரிக்கையின் பேரில் கொடைச்செம்மல் திருவாளர் கதிர்காமநாதன் (எஸ்.கே.நாதன்) அவர்கள் வாகனத்தினை அன்பளிப்புச் செய்துள்ளார்.


இச்சேவை முற்றிலும் இலவசமான மக்கள் சேவையாகும்.

இதேவேளை தனியார் அமரர் ஊர்திகள் வவுனியாவுக்கு ஒரு சடலத்தைக் கொண்டு செல்வதற்கு 40 ஆயிரம் ரூபாவுக்கு மேல் கட்டணத்தை அறவிடுவது குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

முகநூலில் நாம்