கிளிநொச்சி விபத்தில் ஒருவர் பலி; இருவர் காயம்!

கிளிநொச்சி ஜெயபுரம் பொலிஸ் பிரிவில் நேற்று (23) இரவு இரவு 8.40 மணியளவில் இடம்பெற்ற விபத்தில் ஒருவர் ஸ்தலத்தில் பலியானதுடன் மேலும் இருவர் காயமடைந்துள்ளனர்.

கிளிநொச்சி ஜெயபுரம் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட மன்னார் – யாழ் வீதியில் குறித்த விபத்து இடம்பெற்றுள்ளது.

வீதியில் தரித்து நின்ற லொறியுடன் யாழ். நோக்கி பயணித்த வான் மோதியதில் குறித்த விபத்து இடம்பெற்றுள்ளது.

குறித்த லொறியானது தரித்து நிற்பதற்கான எந்தவொரு சமிக்ஞையும் வழங்காத நிலையில் யாழ். நோக்கிய திசையில் நிறுத்தப்பட்டுள்ளது.

விபத்தில் வானில் பயணித்த மூவரில் சாரதிக்கு அருகில் இருந்து பயணித்த நபர் உயிரிழந்ததுடன், சாரதி மற்றும் மேலுமொருவர் சிறு காயங்களிற்கு உள்ளாகியுள்ளனர்.
யாழ்ப்பாணம் மல்லாகம் பகுதியை சேர்ந்த 43 வயதுடைய சுவேந்திரன் என்பவரே உயிரிழந்துள்ளார்.

உயிரிழந்தவரின் சடலம் முழங்காவில் வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது. மேலதிக விசாரணைகளை ஜெயபுரம் பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.

முகநூலில் நாம்