கிளிநொச்சி முரசுமோட்டை பகுதியில் 50 கிலோ எடையுடைய கஞ்சா பொதியுடன் இளம் குடும்ப பெண் கைது

கிளிநொச்சி கண்டாவளை பிரதேச செயலாளர் பிரிவிற்குட்பட்ட முரசுமோட்டை பகுதியில் 50 கிலோ எடையுடைய கஞ்சா பொதியுடன் இளம் குடும்ப பெண் கைது செய்யப்பட்டுள்ளார். குறித்த சம்பவம் இன்று வியாளக்கிழமை இடம்பெற்றள்ளது. கிளிநொச்சி இரணைமடு விமானப்படையினரால் வழங்கப்பட்ட தகவலிகமைய, கிளிநொச்சி புலனாய்வுப்பிரிவு பொறுப்பதிகாரி குறித்த தகவலை கிளிநொச்சி முல்லைத்தீவு மாவட்ட பிரதி பொலிஸ்மா அதிபர் கவனத்திற்கு கொண்டு செல்லப்பட்டதை அடுத்து அவரது வழிநடத்தலில் கிளிநொச்சி தலைமை பொலிஸ் நிலைய பதில் கடமை பொறுப்பதினாரி சம்பிக்க தலைமையிலான பொலிஸ் குழுவினரால் குறிதத் கஞ்சா பொதியும், அதனை மறைத்து வைத்திருந்த குற்றத்திற்காக இளம் குடும்ப பெண்ணும் கைது செய்யப்பட்டுள்ளார். குறித்த சுற்றிவளைப்பு நடவடிக்கையினை விமானப்படையினர் மற்றம் புலனாய்வு பிரிவினரின் ஒத்துழைப்புடன் பொலிசார் மேற்கொண்டிருந்தனர்.

குறித்த சுற்றிவளைப்பின்புhது வீட்டில் மறைத்து வைக்கப்பட்டிருந்த 50 கிலோ எடையுடைய கஞ்சா பொதி இதன்புhது மீட்கப்பட்டுள்ளது, மீட்கப்பட்ட வீட்டிலிருந்த குடும்பப்பெண்ணே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார். குறித்த சம்பவம் தொடர்பில் பொலிசார் தொடர்ந்தும் விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர். கைது செய்யப்பட்ட பெண்ணை விசாரணைகளிற்காக கிளிநொச்சி மாவட்ட நீதவான் நீதிமன்றில் அனுமதி கோரியுள்ளனர். நான்கு நாட்கள் குறித்த பெண்யை பொலிஸ் காவலில் தடுத்து விசாரிக்க மன்றிடம் பொலிசாரால் அனுமதி கோரப்பட்டுள்ளது.
குறித்த கஞ்சா பொதி கைது செய்யப்பட்ட பெண்ணின் கணவரால் கொண்டுவரப்பட்டது எனவும், குறித்த சுற்றிவளைப்பின்புhது குறித்த சந்தேக நபர் தப்பியோடியுள்ளதாகவும் ஆரம்பகட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது. மேலதிக விசாரணைகளை கிளிநொச்சி பொலிசார் தொடர்ந்தும் மேற்கொண்டு வருகின்றனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

முகநூலில் நாம்