கிளிநொச்சி மாவட்ட செயலக புதிய அரசாங்க அதிபர் மற்றும் மேலதிக அரசாங்க அதிபர் கடமைகளை பொறுப்பேற்பு!

கிளிநொச்சி மாவட்ட செயலகத்திற்கான புதிய அரசாங்க அதிபர் மற்றும் மேலதிக அரசாங்க அதிபர் தனது கடமைகளை பொறுப்பேற்றுள்ளனர். குறித்த இருவரையும் வரவேற்கும் நிகழ்வு மாவட்ட செயலகத்தில் இன்று இடம்பெற்றுள்ளது.

இதன்போது கிளிநொச்சி மாவட்ட செயலகத்தின் புதிய அரசாங்க அதிபராக ரூபவதி கேதீஸ்வரன் தனது கடமைகளை பொறுப்பேற்றுக்கொண்டுள்ளதுடன், கிளிநொச்சி மாவட்ட மேலதிக அரசாங்க அதிபராக கனகராஜா சிறிமோகனன் கடமைகளை பொறுப்பேற்றுள்ளார்.

முகநூலில் நாம்