கிளிநொச்சி மாவட்டத்தில் 310 பேர் சுய தனிப்படுத்தலில் – மாவட்ட அரச அதிபர்

கிளிநொச்சி மாவட்டத்தின் தற்போதைய கொரோனா நிலைமை தொடர்பாக மாவட்ட
அரசாங்கதிபர் ரூபாவதி கேதீஸ்வரன் இன்று ஊடக சந்திப்பை
மேற்கொண்டிருந்தார்.குறித்த ஊடக சந்திப்பில்  தற்போது
310பேர் சுய தனிமைப்படுத்தலுக்கு உட்பட்டுள்ளனர்
எனவும் ஜெயபுரம் பகுதியில் கொழும்பில் தொழில் புரிந்த வீடு திரும்பிய
நிலையில் சுய தனிமைப்படுத்தலுக்குட்பட்ட நபர் ஒருவருக்கு கொரோனா தொற்று
உறுதி செய்யப்பட்டது.

  கொரோனா தொற்றுகு  உள்ளானவருடன்  தொடர்புபட்ட குடும்பங்களும் சுய
தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப்பட்டுள்ளதாகவும் அவர்களுக்கான PCR
பரிசோதனை நிறைவடைந்து தொற்று இல்லை என உறுதிப்படுத்தப்பட்டாலும்
தொடர்ந்து 14நாட்கள் சுய தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப்பட்டுள்ளதாகவும்
தெரிவித்த அவர் தொடர்ந்து கருத்து தெரிவிக்கையில்.

கிளிநொச்சி மாவட்டத்தில் தனிமைப் படுத்தப்பட்டவர்களுக்கான உலருணவு
பொதிகளை நான்கு பிரதேச செயலகமும் வழங்கி வருகின்றது .இதுவரை மாவட்டத்தில்
197 குடும்பங்களுக்கான உலருணவுப்பொதிகள் வழங்கப்பட்டுள்ளதாகவும்.

அதேபோன்று மாதாந்த சிகிச்சைக்காக வைத்தியசாலை வரும் நோயாளர்களுக்கு
குறிப்பாக முதியவர்களுக்கு தற்போது தபால் மூலம் வீடுகளுக்கு மருந்துகள்
அனுப்பி வைக்கும் நடவடிக்கையும் மேற்கொள்ளப்பட்டுவருகின்றமை
குறிப்பிடத்தக்கவிடயம்

மாவட்டத்தில் கொரோனா நிலைமை சுகாதார தரப்பினரின் அறிக்கையின் படி ஓரளவு
கட்டுப்பாட்டில் இருந்தாலும் மக்கள் சுகாதார நடைமுறைகளை தொடர்ச்சியாக
முன்னெடுக்க வேண்டும் எனவும் மாவட்ட அரசாங்கதிபர் கூறினார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

முகநூலில் நாம்