கிளிநொச்சி மாவட்டத்தில் ஐ றோட் திட்டத்தில் 181 கிலோ மீற்றரில் 47 வீதிகள் புனரமைப்பு – ஒருங்கிணைப்பு குழுத் தலைவர்

கிளிநொச்சி மாவட்டத்தில் ஆசிய அபிவிருத்தி வங்கியின் நிதி உதவியில் 181.78 கிலோ மீற்றரில் 47 வீதிகள் புனரமைப்புச் செய்யப்படவுள்ளது என மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுவின் தலைவர் மு. சந்திரகுமார் தெரிவித்துள்ளார். கடந்த வாரம் கிளிநொச்சி மாவட்டச் செயலகத்தில் இடம்பெற்ற கூட்டத்தின் போதே  அவர் இதனை தெரிவித்துள்ளார்.
கிளிநொச்சியில் இதுவரை காலமும் புனரமைக்கப்படாதுள்ள  உள்ள மற்றும் பிரதான இணைப்பு வீதிகளை புனரமைப்புச் செய்வது தொடர்பில்  மாவட்டச் செயலகத்தில்  மாவட்டச ் செயலாளர் திருமதி றுபவதி கேதீஸ்வரன், வீதி அபிவிருத்தி அதிகார சபையின் உயரதிகாரிகள்  பிரதேச சபைகளின்  செயலாளர்கள் பொது அமைப்புகளின் பிரதிநிதிகள் ஆகியோருடன் இடம்பெற்ற கூட்டத்தின் போதே இத் தகவலை அவர் தெரிவித்துள்ளார்.
மூன்று தொகுதிகளாக பிரிக்கப்பட்டு  வீதிகள் புனரமைக்கப்படவுள்ளது. அந்த வகையில்  முதல் கட்டமாக கரைச்சியில் வன்னேரிக்குளம் வீதி, செம்பியன்பற்று பாலாவி கிராஞ்சி வீதி, வன்னேரிக்குளம் பல்லவராயன் வீதி, வேரவில் வலைப்பாடு வீதி, வீரபாண்டியன் வீதி, அக்கராயன்குளம் எல்பி பிரதான வாய்க்கால் வீதி, வன்னேரிக்குளம் ஜெயபுரம் வீதி, பூநகரியில் ஆனைக்கட்டி வீதி, வெட்டுக்காடு வீதி,  செ்ககாலை முட்கொம்பன் வீதி ஆகிய 60.31 கிலோ மீற்றர் வீதிகளும்,
இரண்டாம் கட்டடமாக  முறிகண்டி அக்கராயன்குளம் வன்னேரி வீதி, ரெயிலர் வீதி, முறிகண்டி கனகபுரம் வீதி, றோஸ் வீதி, புதுமுறிப்பு கோணாவில் வீதி, கோணாவில் ஸகந்தபுரம் வீதி, அம்பாள்குளம் மத்திய வீதி, கோணாவில் யூனியன்குளம் வீதி, திருக்குடும்ப கன்னியர்மட வீதி, கனகபுரம் வீதி, திருநகர் கனகபுரம் வீதி, குமாரசாமி வீதி, உள்ளிட்ட 53.60 கிலோ மீற்றர் வீதிகளும்,
மூன்றாம் கட்டமாக கண்டாவளை புண்ணைநீராவி வீதி, இராமநாதபுரம் தர்மபுரம் வீதி, குமரபுரம் வீதி, உப்புக்குளம் வீதி, புண்ணைநீராவி பிரமந்தனாறு வீதி, நாகதம்பிரான் கோவில் கலவெட்டித்திடல் வீதி, வட்டக்கச்சி அழகரட்னம் வீதி, கட்சன் வீதி 1, கட்சன் வீதி இரண்டு, சில்வா வீதி, ஆறுமுகம் வீதி, சிவசுந்தரம் வீதி, புளோப்பளை அல்லிப்பளை வீதி, மாசார் வீதி, சின்னத்தாளையடி வீதி உள்ளிட்ட  67.87 கிலோ மீற்றர் வீதிகளும் புனரமைக்கப்படவுள்ளது என மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுவின் தலைவர் மு.சந்திரகுமார் தெரிவித்துள்ளார்.
இவ்வீதி புனரமைப்பு பணிகளின் ஆரம்ப கட்ட வேலைகள் தொடங்கியுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்

முகநூலில் நாம்