கிளிநொச்சி பூநகரி நல்லூர் மகாவித்தியாலயத்தின் நூற்றாண்டு விழா

ஆலய வழிபாட்டுடன் நிறைகுடம் ஏந்தி பிரதமவிருந்தினர்களை வரவேற்ப்பும் மற்றும் பாடசாலை மாணவ மாணவிகளின் கும்மி நடனத்துடன் விருந்தினர்கள் அழைத்து வரப்பட்டனர்.தொடர்ந்து பாடசாலையின் நூற்றாண்டு நினைவாக நிறுவப்பட்ட சரஸ்வதி சிலை மற்றும் நூற்றாண்டு நினைவு தூபி என்பன திறந்து வைக்கப்பட்டது. பாடசாலையின் நூற்றாண்டு வரலாற்றைக்கூறும் செந்நெல் என்ற நூலும் வெளியிடப்பட்டது.

கிளிநொச்சி பூநகரி நல்லூர் மகா வித்தியாலயத்தின் முதல்வர் தலைமையில் நடைபெற்ற நிகழ்வில் பிரதம விருந்தினராக யாழ் பல்கலைக்கழக துணைவேந்தர் பேராசிரியர் சிறீ சற்குணராஜா கலந்து நிகழ்வை சிரப்பித்தார்.

இதன்போது பள்ளியின் மூன்று மூத்தாதையோரை கௌரவிக்கப்பட்டதோடு மாணவர்களுக்கு விருதுகளும் வழங்கி வைக்கப்பட்டமை சிரப்பம்சமாகும்.

நிகழ்வில் உரையாற்றிய யாழ் பல்கலைக்கழக துணைவேந்தர் பேராசிரியர் சிறீ சற்குணராஜா அவர்கள் இவ்வாரு தெரிவித்தார் சுதந்திரத்துக்கு பின் இந்தியா 75 வருடம்
அங்கு 46 மொழிகள், ராக்கெட் விட்டுட்டாங்கள்

சுதந்திரத்துக்கு பின் இலங்கை 75 வருடம்
இங்கு 2 மொழிகள், பாராளுமன்றத்தில் மாறித்தவளைபோல் கத்தல் மட்டும்தான்.

குறித்த நிகழ்வில்  யாழ் பல்கலைக்கழக வாழ்நாள் பேராசிரியர் க.கந்தசாமி, கிளிநொச்சி தெற்கு வலயத்தின் வலயக்கல்விப்பணிப்பாளர் கமலராஜ், பாடசாலையின் பழைய மாணவர்கள், பெற்றோர்கள், மாணவர்கள் என பலரும் கலந்து கொண்டிருந்தனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

முகநூலில் நாம்