கிளிநொச்சி பாடசாலைகளை ஆரம்பிப்பது தொடர்பில் நாளையே தீர்மானிக்கப்படும் மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர்

கடந்தவாரம் கொரோனா தொற்று அச்சம் காரணமாக ஆரம்பித்த அன்றே மீண்டும்
பூட்டப்பட்ட கிளிநொச்சி பாடசாலைகளை மீளவும் ஆரம்பிப்பது தொடர்பில் நாளை
திங்கள் கிழமையே தீர்மானிக்கப்படும் என மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர்
வைத்தியர் கேதீஸ்வரன் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்

கிளிநொச்சி பாடசாலைகளை மீளவும் ஆரம்பிப்பது தொடர்பில் இன்று கிடைக்கவுள்ள
பிசிஆர்  முடிவுகளின் அடிப்படையில் நாளை திங்கள் கிழமை கிளிநொச்சி
மாவட்டச் செயலகத்தில் அரச அதிபர் திருமதி றூபவதி கேதீஸ்வரன் அவர்களின்
தலைமையில் இடம்பெறவுள்ள துறைசார் அதிகாரிகளுடனான கூட்டத்தின் பின்னரே
தீர்மானிக்கப்படும் என தெரிவித்தார். 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

முகநூலில் நாம்