
கிளிநொச்சி பளை பொலீஸ் பிரிவுக்குட்பட்ட இரண்டு பொலிசார் கஞ்சா விற்க முயன்ற போது கைது செய்யப்பட்டுள்ளனர். கிளிநொச்சி பளை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட புதுக்காட்டு பகுதியில் குறித்த சம்பவம் நேற்றிரவு எட்டு மணியளவில் இடம்பெற்றுள்ளது.
விசேட மதுவரித் திணைக்கள பிரிவினர் கொழும்பிலிருந்து வருகை தந்து புதுக்காட்டுப் பகுதியில் உள்ள அரச விடுதி ஒன்றில் இருந்தவாறு பளை பொலீஸ் நிலையத்தைச் சேர்ந்த குறித்த இரண்டு பொலீஸாரிடம் 50 கிலோ கிராம் கஞ்சாவை பெறுவதற்கு
பேரம் பேசிஅவர்களது இருப்பிடத்திற்கு அழைத்து கையும் களவுமாக கைது செய்துள்ளனர். கைது செய்யப்படும் போது பொலீஸாரிடம் 2.250 கிலோ கிராம் கஞ்சா இருந்ததாக தெரிவிக்கப்படுகிறது.
கைது செய்யப்பட்டுள்ள பொலீஸார் இருவரும் கொழும்புக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளனர்.