கிளிநொச்சி கரைச்சி பிரதேசத்தில் வியாழன் 8 மணித்தியாலயம் நீர் வெட்டு

கிளிநொச்சி கரைச்சி பிரதேசத்தில் வரும் வியாழக் கிழமை (02.06.2022)  காலை 9 மணி தொடக்கம் மாலை 5  மணி வரை எட்டு மணித்தியாலயங்கள் நீர் வெட்டு அமுல்ப்படுத்தப்படும் என தேசிய நீர் வழங்கல் வடிகாலமைப்புச் சபையின் கிளிநொச்சி அலுவலகம் அறிவித்துள்ளது.

திருத்தம் மற்றும் பராமரிப்பு பணிகள் காரணமாக குறித்த தினத்தில் மாத்திரம் இந் நீர் வெட்டு அமுல்ப்படுத்தப்படும் எனவும் எனவே  தேசிய நீர் வழங்கல் வடிகாலமைப்புச் சபையின் குடி நீர் விநியோகத்தை பெற்று பயன்படுத்துகின்ற பொது மக்கள் முன்னாய்த்த நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறும்
கேட்டுக்கொண்டுள்ளனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

முகநூலில் நாம்