கிளிநொச்சியில் 208 கிலோ கேரள கஞ்சா மற்றும் சொகுசு வாகனத்துடன் ஒருவர் கைது


கிளிநொச்சி விவேகானந்தநகரில் உள்ள வீடு ஒன்றினை நேற்று (03) மாலை 6
மணியளவில் விசேட அதிரடிப்படையினர் சுற்றிவளைத்து தேடுதல் மேற்கொண்ட போது
சொகுசு வானத்தில் மறைத்து வைக்கப்பட்டிருந்த 208 கிலோ கேரள கஞ்சா
கைப்பற்றப்படடுள்ளது.

கிளிநொச்சி விசேட அதிரடிப்படையினருக்கு கிடைத்த இரகசிய தகவலிற்கு அமைவாக
03.06.2022 நேற்று மாலை 6.00 மணியளவில் விவேகானந்தநகர் கிராமத்தில்
மன்னாரிலிருநது வருகை தந்து வாடகைக்கு வீடு ஒன்றினை பெற்று  வசித்து
வந்தவர்களின் வீடு சுற்றி வளைக்கப்ட்டு தேடுதல் மேற்கொள்ளப்பட்டது. இதன்
போதே 208 கிலோ கேரள கஞ்சாவும் சந்தேக நபர் ஒருவரும் கைது
செய்யப்பட்டு்ளளார் என விசேட அதிரடிப்படையினர் தெரிவித்துள்ளனர்.

 கைப்பற்றப்பட்ட வாகனம் மற்றும் சந்தேக நபரை சட்ட நடவடிக்கைகளுக்காக
விசேட அதிரடிப்படையினர் கிளிநொச்சி பொலீஸாரிடம் கையளித்துள்ளனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

முகநூலில் நாம்