கிளிநொச்சியில் 2000 நாளில் வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்கள் மாபெரும் கவனயீர்ப்பு போராட்டம்

வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்கள் தமது போராட்டத்தை ஆரம்பித்து 2000 நாட்களை எட்டியுள்ள இன்றைய தினத்தில் கிளிநொச்சி மாபெரும் கவனயீர்ப்பு  போராட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டுள்ளது.

கிளிநொச்சி கந்தசுவாமி ஆலய முன்றலில் ஆரம்பமான கவனயீர்ப்பு போராட்டமானது டிப்போச் சந்தியை சென்றடைந்து அங்கு கண்டன  உரைகளும் இடம்பெற்றன.

வட, கிழக்கு மாகாணங்களில் வலிந்து காணாமலாக்கப்பட்டோரின் உறவினர்கள் இணைந்து உண்மையையும் நீதியையும் கோரி முன்னெடுத்துவரும் தொடர் போராட்டம் 2000 நாட்களை எட்டியுள்ளமையை நினைவுகூரும் வகையில் வடக்கு, கிழக்கு
வலிந்து காணாமலாக்கப்பட்டோரின் உறவுகளின் சங்கத்தினால் இன்று கிளிநொச்சி கந்தசுவாமி ஆலயத்திற்கு முன்பாக மாபெரும் கவனயீர்ப்புப்போராட்டமொன்று ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

வடக்கு, கிழக்கு வலிந்து காணாமலாக்கப்பட்டோரின் உறவுகளின் சங்கம் தமது அன்பிற்குரியவர்களுக்கு என்ன நேர்ந்தது என்ற உண்மையை அறிந்துகொள்வதுடன் அவர்களுக்குரிய நீதியை நிலைநாட்டுமாறு வலியுறுத்தியும்,  இனப் படுகொலையை
மேற்கொண்டவர்களை கைது செய்ய கோரியும், இப் போராட்டம்
முன்னெடுக்கப்பட்டிருந்தது.

இதன் போது வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்கள், மதத் தலைவர்கள், சிவில் சமூக செயற்பாட்டாளர்கள், அரசியல் பிரமுகர்கள் பொது மக்கள் என பலர கலந்துகொண்டனர். 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

முகநூலில் நாம்