கிளிநொச்சியில் 14 வயது சிறுவனைக் காணவில்லை

கிளிநொச்சி கரைச்சி பிரதேச செயலக பிரிவிற்குட்பட்ட உதயநகர் பகுதியில் நேற்று மாலையில் இருந்து 14 வயது ரவிச்சந்திரன் தாரங்கன் எந்த சிறுவனே காணவில்லை என பெற்றோர்கள் பொலிஸில் முறைப்பாடு செய்துள்ளனர்.

கிளிநொச்சி உதயநகர் மேற்கில் உள்ள தனது வீட்டிலிருந்து கரடிப்போக்கு சந்தியில் உள்ள தனது தந்தையின் கடைக்கு செல்வதாக சென்றபோது கடைக்கும் செல்லவில்லை வீட்டுக்கும் திரும்பி வரவில்லை இன்று கிளிநொச்சி பொலிஸில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.

இந்த சிறுவனை யாரும் எங்கேயாவது தென்பட்டால் உடனடியாக (0779179532, 0769671515) தொலைபேசி இலக்கத்திற்கும் அருகிலுள்ள பொலீஸ் நிலையத்துக்கு தெரிவிக்கும்படி கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

முகநூலில் நாம்