கிளிநொச்சியில் வேகக்கட்டுப்பாட்டை இழந்து பாரவூர்தியின் முன்பகுதியில் மோதி விபத்து!

கிளிநொச்சி கந்தசுவாமி கோயில் அருகில் 57 வது இராணுவ முகாம் முன்பாக ஏ-9 வீதியில் இடம்பெற்ற விபத்தில் ஒருவர் படுகாயமடைந்துள்ளார்.

குறித்த விபத்து இன்று (16.01.2020) பகல் 12.30 மணியளவில் இடம்பெற்றுள்ளதுடன் இதில் மோட்டார் சைக்கிளை லொறி மோதியுள்ளது.

பரந்தன் பகுதியில் இருந்து கிளிநொச்சி நோக்கி வந்துகொண்டிருந்த பாரவூர்தி  கந்தசுவாமி கோயில் அருகில் 57 வது இராணுவ முகாம் முன்பாக உள்ள வளைவில் திருப்ப முட்பட்ட வேளையில்  பரந்தன் பகுதியில் இருந்து கிளிநொச்சி நோக்கி வந்துகொண்டிருந்த மோட்டார்  சைக்கிலில் வந்தவர் வேகக்கட்டுப்பாட்டை  இழந்து  பாரவூர்தியின் முன்பகுதியில் மோதி விபத்து இடம்பெற்றுள்ளது.

இவ்விபத்தில் மோட்டார் சைக்கிளில் பயணித்தவர் படுகாயம் அடைந்த நிலையில் கிளிநொச்சி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருவதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

மேலும், விபத்தினை ஏற்படுத்திய லொறியையும்  வாகன சாரதியையும் கிளிநொச்சி பொலிஸாரால் கைதுசெய்யப்பட்டு விசாரணைக்கு உட்படுத்தப்பட்டுள்ளார்.

முகநூலில் நாம்