கிளிநொச்சியில் ரயிலில் மோதுண்டு ஒருவர் பலி!

கிளிநொச்சி – இரணைமடு பகுதியில் ரயிலில் மோதுண்டு ஒருவர் பலியாகியுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இச்சம்பவம் இன்று காலை இரணைமடு சந்தியிலுள்ள கள் விற்பனை நிலையத்துக்கு முன்பாக இடம்பெற்றுள்ளது.

உயிரிழந்தவர் கிளிநொச்சி அறிவியல் நகரைச் சேர்ந்த தர்சன் என அடையாளம் காணப்பட்டுள்ளார்.

விபத்து குறித்த மேலதிக விசாரணைகளை கிளிநொச்சி பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

முகநூலில் நாம்