கிளிநொச்சியில் மேலும் 5 பேர் கொரோனா தொற்றுடன் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

அன்மையில்  72 வயதான முதியவர் ஒருவர் தொற்றுடன் அடையாளம்
காணப்பட்டதை தொடர்ந்து, அவருடன் தொடர்பில் இருந்தவர்கள் மீது நடத்தப்பட்ட
பிசிஆர் சோதனையில் 5 பேர் தொற்றுடன் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

72 வயது முதியவர் தொற்றுடன் அடையளம் காணப்பட்டபோது, அவர் தொற்றிற்குள்ளான
விதம் தொடர்பாக சந்தேகம் ஏற்பட்டிருந்தது. அவர் பணியாற்றிய எரிபொருள்
விற்பனை நிலையத்திற்கு அண்மையில் இருந்த தண்ணீர் போத்தல் விநியோக
மையத்தின் மூலம், அல்லது மாகா நிறுவனத்தின் பணியாளர்கள் மூலம் தொற்று
ஏற்பட்டிருக்கலாமென சந்தேகம் ஏற்பட்டது.

இன்றைய பிசிஆர் முடிவுகளின்படி, முதியவர் பணியாற்றிய எரிபொருள் விற்பனை
நிலையத்தின் அருகிலுள்ள தண்ணீர் விநியோக  நிலையத்தில் உள்ள  3 பேர்
தொற்றுடன் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.  

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

முகநூலில் நாம்