கிளிநொச்சியில் பூரண கர்த்தால் அனுஷ்டிப்பு! (படங்கள் இணைப்பு)

கிளிநொச்சியில் பூரண கர்த்தால் அனுஷ்டிப்பு! வர்த்தக நிலையங்கள் பூட்டப்பட்ட நிலையில் மரக்கறி உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்கள் மாற்று இடங்களில் விற்பனை

தமிழ் மக்களின் நினைவு கூறும் உரிமையை அரசு தடுத்தமைக்கு எதிர்ப்புத்
தெரிவித்து இன்றைய தினம்(28) வடக்கு கிழக்கில் கதவடைப்பு போராட்டத்திற்கு
தமிழ் கட்சிகள் அழைப்பு விடுத்தமைக்கு  ஆதரவு தெரிவித்து
கிளிநொச்சியிலும் வர்த்தக நிலையங்கள் பூட்டப்பட்டுள்ளது.

கிளிநொச்சியின் சேவை சந்தை மற்றும் ஏனைய வர்த்தக நிலையங்கள் முழுமையாக
பூட்டப்பட்டிருந்தன.  அரச திணைக்களங்கள் பாடசாலைகள் என்பன
திறக்கப்பட்டிந்தன. ஆனால் பாடசாலையின் மாணவர்களின் வரவு மிக மிக குறைவாக
காணப்பட்டன. வீதிகளில் பொது மக்களின் நடமாட்டமும் குறைந்திருந்தது. ஆனால்
வவுனியா யாழ்ப்பாணம், மற்றும் கிளிநொச்சியின் உள்ளுர் தனியார்
பேரூந்துகள் சேவையில் ஈடுப்பட்டிருந்தன. அத்தோடு இலங்கை போக்குவரத்துச்
சபையின பேரூந்துகளும் சேவையில் ஈடுப்பட்டன.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

முகநூலில் நாம்