கிளிநொச்சியில் பன்னிரண்டு கொவிட் மரணங்கள்

நேற்றைய தினம் கிளிநொச்சி வைத்தியசாலையில் 12 கொவிட் நோயாளர்கள் மரணமடைந்துள்ளனர். அவர்களில் ஐந்து சடலங்கள் நேற்றைய தினமே வவுனியாவுக்கு அனுப்பப்பட்டதாக பொறுப்பு வைத்திய அதிகாரி செ.சுகந்தன் தெரிவித்துள்ளார்.

கடந்த சில நாள்களாக கொவிட்டால் மரணிப்போரின் எண்ணிக்கை அதிகரித்து வரும் நிலையில் சடலங்களை வைத்து பேணும் அறை நெருக்கடி நிலையில் உள்ளது என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

கிளிநொச்சி வைத்தியசாலையில் எட்டு சடலங்களையும் முழங்காவில் வைத்தியசாலையில் நான்கு சடலங்களையும் பேணக்கூடிய நிலை உள்ளது.

கொவிட் தாக்கத்தால் மரணிப்போரை வவுனியாவுக்கே எரியூட்டுவதற்கு அனுப்ப வேண்டியுள்ளது. அதற்கு மாற்றீடாக கிளிநொச்சியில் சடலங்களை மின்சாரத்தில் எரியூட்டும் இடம் ஒன்றை ஏற்பாடு செய்து தருமாறு மாவட்ட ஒருங்கிணைப்புக்குழு தலைவரிடம் கேட்டிருப்பதாக அவர் மேலும் தெரிவித்தார்.

முகநூலில் நாம்