
கிளிநொச்சி நீர் விளையாட்டுசங்கம் விளையாட்டுத்துறை அமைச்சுடன் இணைந்து மேற்கொண்டு வருகின்ற நீர் பயிற்சியின் மூன்றாவது தொகுதி மாணவர்கள் தங்களது பயிறிசியை நிறைவு செய்துள்ளனர்.
கிளிநொச்சி பொது விளையாட்டு மைதானத்தில் உள்ள நீச்சல் பயிற்சி தடாகத்தில் 32 மணித்தியாலயங்கள் அடிப்படை நீச்சல் பயிற்சியை நிறைவு செய்த மாணவர்களுக்கு சான்றிதழ்கள் வழங்கி வைக்கப்பட்டுள்ளன.
முதல் மூன்று அணியைச் சேர்ந்த 120 மாணவர்கள் நீச்சல் பயிற்சியில் ஆரம்ப கட்ட பயிற்சியை நிறைவு செய்துள்ளனர்.முதலில் தங்களை நீர் ஆபத்துக்களிலிருந்து
பாதுகாத்துகொள்வதனை பிரதான நோக்கமாகவும், மற்றும் போட்டிகளில் பங்குபற்றுதல், உடல் ஆரோக்கியம் என்பவற்றை நோக்கங்களாகவும் கொண்டு கிளிநொச்சி நீர் விளையாட்டுக் கழகம் இளைஞர் யுவதிகளிடையே நீச்சல் பயிற்சினை வழங்கி வருகிறது.
பயிற்சியை நிறைவு செய்தவர்களுக்கான சான்றிதழ் வழங்கும் நிகழ்வு அதிபர் அ.பங்கையற்செல்வன் தலைமையில் இடம்பெற்றது. இதன் போது நீர் பயிற்சி சங்கத்தின் செயலாளர் யாழ் போதனா வைத்தியசாலையின் பணிப்பாளர் த . சத்தியமூர்த்தி, கிளிநொச்சி மாவட்ட விளையாட்டு உத்தியோகத்தர் மோகனதாஸ்,
நீர் விளையாட்டு சங்கத்தின் தலைவர் மருத்துவ நிபுணர் மா. தவராஜா,மாவட்ட விளையாட்டு பயிற்றுவிப்பாளர் ஆனந்தராஜா உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.






