கிளிநொச்சியில் நிறைந்த கிராமம் அபிவிருத்தி திட்டத்திற்கு 190 மில்லியன் ரூபா

நிறைந்த கிராமம் சமூக  அடிப்படை கிராம அபிவிருத்தி திட்டததின் கீழ் கிளிநொச்சி மாவட்டத்தில் 166 அபிவிருத்திப் பணிகளுக்காக 190 மில்லியன் ரூபா ஒதுக்கப்பட்டுள்ளது என மாவட்ட  ஒருங்கிணைப்பு குழுவின் தலைவரும்  முன்னாள் பாராளுமன்ற உறுப்பினருமான மு. சந்திரகுமார் தெரிவித்துள்ளார்.
ஜனாதிபதியினால் நடைமுறைப்படுத்தப்படும் ஒவ்வொரு கிராம அலுவலர் பிரிவுக்குமான இரண்டு மில்லியன் ரூபா அபிவிருத்தி திட்டமாகிய நிறைந்த கிராமம் சமூக அடிப்படை அபிவிருத்தி திட்டம் பற்றிய கிளிநொச்சி மாவட்டத்தில் முன்னெடுக்கப்படவுள்ள அபிவிருத்தி சம்மந்தமாக கிளிநொச்சி மாவட்ட ஒருங்கிணைப்பு குழுவின் தலைவரும் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினருமான முருகேசு சந்திரகுமார் தலைமையில் கிளிநொச்சி மாவட்ட செயலகத்தில் கலந்துரையாடல் இடம்பெற்றது.
கிளிநொச்சி மாவட்டத்திலுள்ள 95 கிராம அலுவலர் பிரிவிக்கும் சுமார் 190 மில்லியன் ரூபா படி கரைச்சி செயலகப் பிரிவுக்கு  71 திட்டங்களுக்கு 84 மில்லியன் ரூபாவும், கண்டாவளை பிரதேச செயலர் பிரிவுக்கு 32 திட்டங்களுக்கு 32   மில்லியன் ரூபாவும்,  பூநகரி செயலகப் பிரிவுக்கு திட்டங்களுக்கு மில்லியன் ரூபாவும் மற்றும் பச்சிளைப்பள்ளி செயலகப் பிரிவுக்கு 38 திட்டங்களுக்கு 36 மில்லியன் ரூபாவும் அபிவிருத்திக்காக திட்டங்கள் முன்மொழியப்பட்டுள்ளது. 
குறித்த கலந்துரையாடலில் பிரதேச செயலாளர்கள், அரச அதிகாரிகாரிகள் பிரதேச சபை உறுப்பினர்கள், கிராம அபிவிருத்தி சங்க உறுப்பினர்கள், என பலரும்  கலந்து கொண்டனர் .

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

முகநூலில் நாம்