கிளிநொச்சியில் தடுப்பூசி பெறாதவர்களே அதிக மரணம்

கிளிநொச்சி மாவட்டத்தில் கொவிட்தொற்றினால் உயிரிழந்தவர்களில் தடுப்பூசி பெற்றுக்கொள்ளாதவர்களும் ஒரு தடுப்பூசியை மாத்திரம் பெற்றுக்கொண்டவர்களும் தான் அதிகம் என்பதால் தடுப்பூசிகளை விரைந்து பெற்றுக்கொள்ளுமாறு பிராந்திய சுகாதாரசேவைகள் பணிப்பாளர் சரவணபவன் தெரிவித்துள்ளார்.

நேற்று இடம்பெற்ற ஊடக வியலாளர் சந்திப்பிலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார்.


அவர் மேலும் தெரிவிக்கை யில் –
கிளிநொச்சி மாவட்டத்தில் இன்றுவரை (நேற்று) 5,877 பேர் கொவிட் தொற்றினால் பாதிக் கப்பட்டுள்ளார்கள். அவர்களில் 44 பேர் இதுவரை தொற்றி னால் உயிரிழந்துள்ளார்கள். இறந்தவர்களில் 90 வீதமானவர்கள் தடுப்பூசி பெற்றுக்கொள்ளாதவர்களும் ஒரு தடுப்பூசி பெற்றுக்கொண்டவர்களுமாக உள்ளனர்.


கடந்த 2 வாரங்களாக தொற்றாளர் எண்ணிக்கை மாவட்டத்தில் அதிகமாக காணப்பட்டது. தினமும் 500 தொடக்கம் 600 இற்கு மேற்பட்டவர்களுக்கு பரிசோதனை நடந்தது. இதில் 250 பேர்வரை தொற்றாளர்க ளாக அடையாளம் காணப்பட் டார்கள்.

இந்த வாரம் தொற்று எண்ணிக்கை படிப்படியாக குறைய ஆரம்பித்துள்ளது. சென்ற வாரம் தொற்றாளர் எண்ணிக்கை 150க்கு கீழாக காணப்பட்டது. இந்தவாரம் தொற்று மேலும் குறையும் என எதிர்பார்க்கின்றோம்.

மக்களின் ஒத்துழைப்பே பிரச்சினையாக உள்ளது. நாடு முடக்கப்பட்டிருந்தாலும் மக்களுக்கு வெளியே செல்வதற்கு சில அனுமதிகள் வழங்கப்பட்டுள்ளன. அதனை மக்கள் துஷ்பிரயோகம் செய்வ தாக உணர முடிகின்றது.
வழங்கப்படும் அனுமதியை பயன்படுத்தி தேவையற்று நடமாடுகின்றனர்.

ஆகவே மக்கள் தேவையற்ற விதத்திலே வீதியில் நடமாடு வதை தவிர்க்க வேண்டும். அதே வேளை வீடுகளில் தேவையற்ற நிழ்வுகளையும் தவிர்க்க வேண்டும் என அவர் கேட்டுக்கொண்டுள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

முகநூலில் நாம்