கிளிநொச்சியில் சிறப்பாக இடம்பெற்றது தைப் பொங்கல்


கிளிநொச்சியில் மாவட்டத்தில் தைப் பொங்கல் பல இடங்களிலும் சிறப்பாக இடம்பெற்றுள்ளன.


ஆலயங்கள், வீடுகள், வியாபார நிலையங்கள்,  நிறுவனங்களில் சிறப்பாக தைப் பொங்கல் இடம்பெற்றுள்ளது.உழவர் திருநாளான தைப் பொங்கல் நிகழ்வு கிளிநொச்சி அமெரிக்கன் சிலோன் மிசன் திருச்சபையின்   அருட்தந்தை லூக் ஜோன் தலைமையில்   இடம்பெற்றது.


தமிழ் கிறிஸ்த்தவர்கள் என்ற அடிப்படையில் தமிழர்களுடைய பாரம்பரிய நிகழ்வான பொங்கல் நிகழ்வை தாமும் கொண்டாடியதாக அருட்தந்தை தெரிவித்தார்.
இதனைத் தவிர அரசியல் கட்சி அலுவலகங்கள், வியாபார நிலையங்கள் போன்றவற்றிலும்  சிறப்பாக பொங்கல் நிகழ்வு இடம்பெற்றது.

முகநூலில் நாம்