கிளிநொச்சியில் சட்டவிரோத செயற்பாட்டை கட்டுப்படுத்தும் நோக்கில் விசேட சுற்றிவளைப்பு!

கிளிநொச்சி தர்மபுரம் பொலீஸ் பிரிவுக்குட்பட்ட கல்லாறு கிராமத்தில் தொடர்ச்சியாக குழுக்கிடையிலான மோதல்,வாள் வெட்டு சம்பவங்கள் , மற்றும் சட்டவிரோத செயற்பாடுகள் இடம்பெற்று வருகின்ற நிலையில் அதனை கட்டுப்படுத்தும் வகையில்  குறித்த இன்று (07) காலை சுற்றிவளைப்பு
சுற்றிவளைப்பு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

குறித்த சுற்றிவளைப்பில் பொலீஸார், பொலிஸ் விசேட
அதிரடிப்படையினர்.இராணுவத்தினர். இணைந்துமேற்கொண்டிருந்தனர்

இந்த சுற்றிவளைப்பின் போது வாள் ஒன்று , கசிப்பு, உள்நாட்டில்
தயாரிக்கப்பட்ட துப்பாக்கி,  ஆவணங்கள் இன்றிய நிலையில் காணப்பட்ட இரண்டு மோட்டார் சைக்கிள் என்பவற்றை பொலீஸார் மீட்டதுடன் சந்தேகத்தின் பேரில் 08 நபர்களையும்  கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

முகநூலில் நாம்