
கிளிநொச்சி கரைச்சி பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட வன்னேரி சோலை மற்றும் ஆனைவிழுந்தான் ஆகிய கிராமங்களில் நேற்று இரவு பெய்த கனமழையுடன் வீசிய பலத்த காற்றினால் 11 வீடுகள் பகுதியளவில் சேதம்.
வன்னேரி சோலை பகுதியில் வீசிய சுழல் காற்று காரணமாக 5 வீடுகளும் ஆனைவிழுந்தான் குளம் கிராமத்தில் வீசிய சுழல் காற்று காரணமாக குறித்த பகுதியில் 6 வீடுகளின் கூரைகள் காற்றினால் தூக்கி வீசப்பட்ட நிலையில் குறித்த வீடுகளும் பகுதியளவில் சேதமடைந்துள்ளது.
ஆனைவிழுந்தான் குளம் கிராமத்தில் காற்றின் காரணமாக தகரம் தலையில் வெட்டிய நிலையில் மூதாட்டி ஒருவருக்கு சிறு காயங்கள் ஏற்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கவிடயம்.
இதேபோன்று பாடசாலை செல்லும் பிள்ளைகளின் புத்தகங்களும் மழையில் நனைந்தமையால் புத்தகங்களை உளளரவிடுவதை எம்மால் அவதானிக்க முடிந்தது