கிளிநொச்சியில் காட்டு யானை தாக்கிய விரிவுரையாளருக்கு அறுவை சிகிச்சை!

காட்டு யானை தாக்குதலுக்கு உள்ளான யாழ்ப்பாண பல்கலைக்கழகத்தின் கிளிநொச்சி வளாக விரிவுரையாளர் இன்றைய தினம் சத்திரச் சிகிச்சைக்கு உட்படுத்தப்பட்டுள்ளார்.

தேசிய வைத்தியசாலை தகவல்கள் இதனைக் குறிப்பிடுகின்றன.

32 வயதான யாழ்ப்பாண பல்கலைக்கழகத்தின் தொழிநுட்ப பிரிவு விரிவுரையாளரான காயத்திரி தில்ருக்ஷி அண்மையில் விகாரை ஒன்றிற்கு சென்று வீடு திரும்பும் போது காட்டு யானை தாக்குதலுக்கு உள்ளானார்.

இந்த நிலையில் கிளிநொச்சி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவர் மேலதிக சிகிச்சைக்காக யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டிருந்தார்.

பின்னர் அவர் உலங்கு வானூர்தி ஊடாக கொழும்பு தேசிய வைத்;தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

முகநூலில் நாம்