கிளிநொச்சியில் கண்ணிவெடி அகற்றும் பணியில் ஈடுபட்ட பெண் காயம்

கிளிநொச்சியில் இடம்பெற்ற கண்ணி வெடி வெடிப்புச் சம்பவத்தில் மூன்று பிள்ளைகளின் தாயொருவர் காயமடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. கிளிநொச்சி – இயக்கச்சி, நித்தியவெட்டை பகுதியில் கண்ணிவெடி அகற்றும் பணியில் ஈடுப்பட்டுக்கொண்டிருந்த பெண்ணே இவ்வாறு கண்ணி வெடி வெடித்ததில் காயமடைந்துள்ளார்.

காயமடைந்த பெண் சிகிச்சைகளுக்காக யாழ். போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இவ்வாறு காயமடைந்துள்ள பெண் கிளிநொச்சி இரத்தினபுரத்தை சேர்ந்த மூன்று பிள்ளைகளின் தாயாரான 35 வயதுடையவர் என தெரிவிக்கப்படுகிறது.

முகநூலில் நாம்