
கிளிநொச்சியில் முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் 2022 நிகழ்வு சமத்துவக்
கட்சி அலுவலகத்தில் உணர்வுபூர்வமாக அனுஸ்டிக்கப்பட்டது.
மிகப்பெரும் மனித பேரவலத்தை ஏற்படுத்திய இறுதி யுத்தத்தில் கொல்லப்பட்ட
அனைத்து உறவுகளுக்கும் வருடம்தோறும் மே மாதம் உணர்வு பூர்வமாக இழந்த
உறவுகள் நினைவேந்தப்படுகின்றார்கள். அந்த வகையில் சமத்துவக் கட்சியின்
அலுவலகத்திலும் இவ்வருடமும் நினைவேந்தல் நிகழ்வானது
முன்னாள் போராளி கண்ணன் தலைமையில் இடம்பெற்றது.
கரைச்சி பிரதேச சபையின் உறுப்பினர் லோறன்ஸ் பொதுச் சுடரினை ஏற்றி வைக்க
ஏனையவர்களும்
சுடர்களை ஏற்றி நினைவு படத்திற்கு மலர் அஞ்சலி செலுத்தி
முள்ளிவாய்க்கால் நினைவேந்தலை கடைப்பிடித்தனர்.









