கிளிநொச்சியில் இயந்திர படகுடன் 77.300 கிலோகிராம கஞ்சா மீட்பு!

கிளிநொச்சி பொலிசாரால் 77.300 கிலோகிராம எடையுடைய கேரளா கஞ்சா கிளிநொச்சி குடமுருட்டி பாலத்தின் கலப்பு வழியாக கடத்திவைப்பட்ட போது  மீட்கப்பட்டுள்ளது.

குறித்த குற்றச்செயலுடன் தொடர்புடைய சந்தேக நபர்களை தொடர்பில் விசாரணைகள் இடம்பெற்ற வருவதாக பொலிசார் தெரிவிக்கின்றனர். 


கிளிநொச்சி பொலிஸ் நிலைய மது ஒழிப்பு பிரிவிற்கு கிடைத்த தகவலிற்கு அமைவாக மேற்கொள்ளப்பட்ட விசேட சுற்றிவளைப்பின் போதே குறித்த கஞ்சா மீட்கப்பட்டுள்ளது. 
கிளிநொச்சி ஊடாக வேறு பகுதிகளிற்கு கடத்தப்படுவதற்காக எடுத்துவரப்பட்ட சந்தர்ப்பதிலேயே பொலிசார் சுற்றவளைப்பினை மேற்கொண்டுள்ளனர்.

இதன்போது சந்தேக நபர்கள் தப்பியோடியுள்ளதாகவும் அவர்களை  கைது செய்வதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாகவும் பொலிசார் தெரிவிக்கின்றனர்.

குறித்த சம்பவம் நேற்று ஞாயிற்றுக்கிழமை அதிகாலை இடம்பெற்றுள்ளது.
இதன்போது 77.300 கிலோ கிராம் கஞ்சா, இரண்டு கையடக்க தொலைபேசிகள், படகு மற்றும் 40 கோஸ் பவர் கொண்ட இயந்திரம் ஆகியன பொலிசாரால் கைப்பற்றப்பட்டுற்றது.

மேலதிக விசாரணைகளை கிளிநொச்சி பொலிசார் மேற்கொண்டு வருகின்றனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

முகநூலில் நாம்