கிளிநொச்சியில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ள மக்கள்!

சமூக சீர்கேடான செயற்பாடுகளுக்கு எதிர்ப்புத் தெரிவித்து கிளிநொச்சி, விநாயகபுரம் மக்கள் ஆர்ப்பாட்டம் ஒன்றை முன்னெடுத்திருந்தனர். குறித்த போராட்டம் இன்று (சனிக்கிழமை) மாலை 4 மணியளவில் விநாயகபுரம் கிராம அபிவிருத்தி சங்க மண்டபம் முன்பாக முன்னெடுக்கப்பட்டது.

இதன்போது, குறித்த பிரதேசத்தில் இயங்கும் விபச்சார விடுதியை தடை செய்யவும் சட்ட நடவடிக்கை மேற்கொள்ளக் கோரியும் போராட்டம் நடைபெற்றது. குறித்த சட்டவிரோத செயற்பாட்டைக் கட்டுப்படுத்தி தமது பிரதேசத்தை பாதுகாத்துத் தருமாறும், பிரதேசத்தின் நன்மதிப்பை மீளப் பெற்றுத் தருமாறும் மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

முகநூலில் நாம்