
அனுமதியின்றி விறகு ஏற்றி வந்த எட்டு வாகனங்களும் அதன் சாரதிகளும் கிளிநொச்சி பொலீஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இச் சம்பவம் நேற்று (12) கிளிநொச்சி ஆனையிறவு மற்றும் பூநகரி
சங்குபிட்டி பகுதியில் இடம்பெற்றுள்ளது.
கிளிநொச்சி மாவட்ட சிரேஸ்ட பொலிஸ் அத்தியட்சகர் மெதவல அவர்களுக்கு கிடைத்த தகவலையடுத்து உதவி பொலிஸ் அத்தியட்சகர் இக்னு அஷார் அவர்களின் தலைமையில் மாவட்ட மது ஒழிப்பு பிரிவு பொலீஸ் பொறுப்பதிகாரி குமாரசிங்க
உட்பட அவரின் குழுவினரினால் ஆனையிரவு வீதித்தடையில் வைத்து அனுமதியின்றி ஏற்றிவரப்பட்ட விறகுகளுடன் ஆறு வாகனங்களும் பூநகரி சங்குப்பிட்டி பால வீதி தடையில் 02 வாகனங்களுமாக 08 வாகனங்களும் அதன் சாரதிகளும் கைது
செய்யப்பட்டுள்ளனர்.
ஒதுக்கப்பட்ட காடுகளில் இருந்து பச்சை மரங்களை வெட்டி அனுமதி பத்திரம் இன்றி ஏற்றி வந்த குற்றச்சாட்டிலேயே கைது செய்யப்பட்டுள்ளதாகவும் இவர்கள் இன்று (13) கிளிநொச்சி மாவட்ட நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தவுள்ளதாகவும் பொலீஸார் தெரிவித்திருந்தனர்.