கிரிக்கெட்டில் 70 சதம் அடித்த கோஹ்லியை எப்படி கேள்வியெழுப்ப முடியும்? அவருக்கு ஆதரவளித்த பிரபல வீரர்

கிரிக்கெட்டில் 70 சதங்கள் அடித்தபின் அவரது டெக்னிக் குறித்து எப்படி கேள்வி எழுப்ப முடியும் என்று விராட் கோஹ்லிக்கு பாகிஸ்தான் ஜாம்பவான் இன்சமாம் உல் ஹக் ஆதரவு அளித்துள்ளார்.

நியூசிலாந்து தொடர் இந்திய அணித்தலைவர் கோஹ்லிக்கு மிகவும் மோசமான வகையில் அமைந்தது. டி20, ஒருநாள், டெஸ்ட் என மொத்தமாக 11 இன்னிங்சில் விளையாடிய அவர் ஒன்றில் மட்டுமே அரைசதம் அடித்தார்.

குறிப்பாக டெஸ்ட் போட்டியில் நான்கு இன்னிங்சில் 38 ரன்களே அடித்தார். கிறிஸ்ட்சர்ச் டெஸ்டில் இரண்டு இன்னிங்சிலும் இன்-ஸ்விங் பந்தில் எல்பிடபிள்யூ ஆனார். அவருக்கு இன்-ஸ்விங் பந்தை சரியாக எதிர்கொள்ள தெரியவில்லை என டெக்னிக் குறித்து விமர்சனம் எழுப்பி வருகின்றனர்.

இதுகுறித்து பாகிஸ்தான் கிரிக்கெட் ஜாம்பவான் இன்சமாம் உல் ஹக் கூறுகையில், நான் அவருக்கு சொல்லும் ஆலோசனை ஏதாவது இருந்தால், அது கவலைப்பட வேண்டாம் என்பதுதான்.

வலிமையான மனநிலை கொண்ட வீரரான கோஹ்லி கலங்கி விடக்கூடாது.

கிரிக்கெட்டில் 70 சதங்கள் அடித்தபின் அவரது டெக்னிக் குறித்து கேள்வியெழுப்ப முடியாது.

கோஹ்லி பழைய நிலைக்கு திரும்புவார். கிரிக்கெட் மைதானத்திற்கு வெளியே சயீத் அன்வர் மற்றும் கங்குலி சிறப்பானவர்கள் என கூறியுள்ளார்.

முகநூலில் நாம்