கிராம உத்தியோகத்தர் வீட்டில் திருட்டு!

கிளிநொச்சி விவேகானந்த நகர் கிராம உத்தியோகத்தர் வீட்டில் நேற்று (08) பிற்பகல் 12 மணியளவில் மாதா சுருவத்தினை திருடுவதற்காக அங்கு பொருத்தப்பட்ட கண்ணாடிகளை உடைத்துள்ளார்கள்.

கிராம உத்தியோகத்தர் விஜிதா வேலைக்கு சென்றிருந்தார். அவரின் விட்டில் யாரும் இல்லை என்பதை அறிந்து திருடர்கள் மாதா சுருவத்தை திருட முயன்ற பச்சத்தில் அதனை திருட முடியாத போது அதில் உள்ள பணத்தை எடுத்துவிட்டு தப்பிச்சென்று உள்ளார்கள்.
இதேபோன்று பல இடங்களில் இவ்வாறு பல திருட்டுகள் ஏற்பட்டுள்ளது குறிப்பிடதக்கது.

நாட்டில் பாரிய பொருளாதார நெருக்கடியினால் தற்போது திருடர்கள் அதிகரித்து வருகின்றார்கள் எங்குபார்த்தாலும் திருடர்களின் நடமாட்டம் இருப்பதால் மக்கள் சிறமப்படுகின்றார்கள். திருடர்கள் வீட்டில் உள்ள பொருட்களை திருடுவதால் தற்போது நாட்டில் ஏற்பட்டுள்ள ஏரிபொருள் பற்றாக்குறை விலை அதிகரிப்பு உள்ளிட்டவற்றால் மக்கள் அதிகம் பாதிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

முகநூலில் நாம்