கிராஞ்சி, பொன்னாவெளி கிராம அலுவலர் பிரிவுகளில் இலவச குடிநீர் விநியோகத்திற்கான நடமாடும் சேவை

கிளிநொச்சி பூநகரி பிரதேச செயலக பிரிவில் கிராஞ்சி மற்றும் பொன்னாவெளி கிராம அலுவலர் பிரிவுகளைச் சேர்ந்த பகுதிகளில் தேசிய நீர் வழங்கல் வடிகாலமைப்புச் சபையின் வீட்டுப் பாவனையாளர்களுக்கான இலவச குடிநீர் விநியோகத்திற்கான நடமாடும் சேவையானது எதர்வரும் 21.06.2022  செவ்வாய் கிழமை காரை 9 மணி முதல் பிற்பகல் 2 மணிவரை  பொன்னாவெளி கிராம அலுவலர் அலுவலகத்தில்  மேற்கொள்ளப்படவுள்ளது.

எனவே பொது மக்கள்  கடந்த வாரம் மேற்கொள்ளப்பட்ட நடமாடும் சேவை மூலம் தாங்கள் பெற்றுக்கொண்ட விண்ணப்படிவங்களை வழங்கப்பட்ட அறிவுறுத்தல்களுக்கு அமைவாக பூர்த்தி செய்து ஆயிரம் ரூபா வைப்பு பணத்துடன் பொன்னாவெளி கிராம
அலுவலர்  அலுவலகத்தில் செவ்வாய் கிழமை இடம்பெறும் நடமாடும் சேவையில் ஒப்படைக்கும் அதேவேளை இதுவரை  விண்ணப்படிவங்களை பெற்றுக்கொள்ளாத பொது மக்கள்  நடமாடும் சேவை தினத்தில் பெற்றுக்கொண்டு பூரணப்படுத்தி வழங்க முடியும் எனத் தெரிவித்துள்ளனர் கிளிநொச்சி தேசிய நீர் வழங்கல் வடிகாலமைப்புச் சபையினர். 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

முகநூலில் நாம்