

கித்துல்கலை பகுதியில் எரிபொருள் நிரப்புவதற்காக வாகனங்கள் நீண்ட வரிசையில் தரித்து நின்றதால் அம்மார்க்கத்தில் இன்று (16) அதிகாலை 02.00 மணியிலிருந்து போக்குவரத்து தடையேற்பட்டது. இதன் காரணமாக அட்டனிலிருந்து கினிகத்தேனை வழியாக கொழும்பு செல்லும் வாகனங்களும், கொழும்பிலிருந்து இம்மார்க்கம் வழியாக அட்டன் செல்லும் வாகனங்களும் பல மணித்தியாலங்களாக காத்திருக்க வேண்டியேற்பட்டது. அதிகாலையில் பணிக்கு செல்வோர்,மாணவர்கள் என பலரும் இதனால் பாதிக்கப்பட்டனர். டீசலைப் பெற முதல் நாள் புதன்கிழமையிலிருந்து வாகனங்கள் காத்திருந்ததால் பல கிலோ மீற்றர் தூரம் வாகன வரிசை காணப்பட்டது. டீசலைப் பெற முதல் நாள் புதன்கிழமையிலிருந்து வாகனங்கள் காத்திருந்ததால் பல கிலோ மீற்றர் தூரம் வாகன வரிசை காணப்பட்டது. பயணிகள் பஸ்கள் மற்றும் ஏனைய வாகனங்கள் பயணிப்பதற்கான முயற்சிகளை கித்துல்கல பொலிஸார் எடுத்தாலும் அவை சாத்தியமாகவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.