
முல்லைத்தீவு மாவட்டத்தின் ஒட்டுசுட்டான் பிரதேச செயலக பிரிவுக்குட்பட்ட பனிக்கன்குளம் கிராமத்தில் இன்று (23) அதிகாலை 2 மணி அளவில் காட்டு யானை ஒன்று கிராமவாசி ஒருவரின் கிணற்றில் விழுந்தது.
கிணற்றிலிருந்து வெளியேற முடியாமல் யானை தத்தளித்தனை அவதானித்த கிராம மக்கள் வன ஜீவராசிகள் திணைக்களத்திற்கு தகவல் கொடுத்ததை அடுத்து வனஜீவராசிகள் திணைக்களத்தின் அதிகாரிகள் குறித்த யானையை மீட்டு வனப்பகுதிக்கு அனுப்புவதற்கு நடவடிக்கை மேற்கொண்டனர்.
அந்தவகையில் இன்று காலை 9 மணி முதல் மாலை 2.45 மணி வரை நீண்ட போராட்டத்தின் பின்னர் யானை கிணற்றில் இருந்து பாதுகாப்பாக மீட்கப்பட்டு வனப்பகுதிக்கு அனுப்பி வைக்கப்பட்டிருக்கிறது.