கிணற்றில் இருந்து ஆணின் சடலம் மீட்பு!

வவுனியா வேப்பங்குளம் பத்திரகாளியம்மன் ஆலயத்திற்கு முன்பாகவுள்ள வாகனங்கள் சேவிர்ஸ் மேற்கொள்ளும் நிலைய வளாக கிணற்றிலிருந்து இன்று (22) காலை ஆண் ஒருவரின் சடலத்தினை நெளுக்குளம் பொலிஸார் மீட்டெடுத்துள்ளனர்.

குறித்த நபர் நேற்று மாலை வீட்டிலிருந்து வெளியேறிய நிலையிலேயே இன்று காலை கிணற்றிலிருந்து சடலமாக மீட்கப்பட்டுள்ளதாகவும் குறித்த மரணம் தற்கொலையா அல்லது கொலையா என்ற கோணத்தில் பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்

வவுனியா நகர் பகுதியில் இயங்கும் தனியார் வர்த்தக நிலையத்தின் உரிமையாளரான 50 வயதுடைய அழகர்சாமி விஜயகுமார் என்ற நபரே இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டவராவார் என்பதுடன் தடவியல் பொலிஸாரின் சோதனை நடவடிக்கைகளுக்காக சடலம் கிணற்றிலிருந்து வெளியே எடுக்கவில்லை.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

முகநூலில் நாம்