காஷ்மீரில் இரு தீவிரவாதிகள் சுட்டுக்கொலை

ஜம்மு-காஷ்மீரின் குல்கம் மாவட்டத்தில் பாதுகாப்பு படையினருடன் ஏற்பட்ட மோதலில் இரண்டு பயங்கரவாதிகள் கொல்லப்பட்டதாக இந்திய பொலிஸார் தெரிவித்துள்ளனர். 


ஜம்மி-காஷ்மீரின் குல்காம் மாவட்டத்தில் உள்ள சிங்கம் பகுதியில் பயங்கரவாதிகள் பதுங்கியிருப்பதாக கிடைத்த இரகசிய தகவலின்  அடிப்படையில் பாதுகாப்புப் படையினர் வெள்ளிக்கிழமை இரவு தேடுதல் பணிகளை முன்னெடுத்தனர்.


இதன்போது பாதுகாப்பு படையினரை நோக்கி பதுங்கியிருந்த தீவிரவாதிகள் துப்பாகிக்கிப் பிரயோக்தை மேற்கொண்டுள்னர். அதையடுத்து பாதுகாப்பு படையினர் முன்னெடுத்த பதில் தாக்குதல்களிலேயே இவ்விரு தீவிரவாதிகளும் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளனர்.
குறித்த தீவிரவாதிகள் இருவரும் எந்த அமைப்பைச் சேர்ந்தவர்கள் என்பது அடையாளங் காணப்படாத நிலையில், எம் 4 ரைபிள் மற்றும் ஒரு பிஸ்டல் ரக துப்பாக்கிகளையும் பாதுகாப்பு படையினர் மீட்டுள்ளனர்.
ஒக்டோபர் 7 ஆம் திகதி, ஷோபியன் மாவட்டத்தின் சுகன் ஜைனாபோரா பகுதியில் நடந்த மோதலில் மூன்று பயங்கரவாதிகள் பாதுகாப்பு படையினரால் கொல்லப்பட்டனர்.


இதேபோன்ற சம்பவத்தில், செப்டம்பர் 27 அன்று அவந்திபோரா மாவட்டத்தின் சம்பூரா பகுதியில் இரண்டு பயங்கரவாதிகள் கொல்லப்பட்டமையும் குறிப்பிடத்தக்கது. 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

முகநூலில் நாம்