கால அவகாசம் கொடுக்காது இலங்கை அரசுக்கு அழுத்தத்தைக் கொடுத்து எமக்கு சர்வதேசம் தீர்வை பெற்றுத்தர வேண்டும்

கால அவகாசம் கொடுக்காது இலங்கை அரசுக்கு அழுத்தத்தைக் கொடுத்து எமக்கு சர்வதேசம் தீர்வை பெற்றுத்தர வேண்டும் –  வடக்கு கிழக்கு வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட சங்கத்தின் தலைவி

கிளிநொச்சி மாவட்ட வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் சங்கம் இன்றைய தினம் கிளிநொச்சி மாவட்டத்தில் அமைந்துள்ள அலுவலகத்தில் ஊடக சந்திப்பு ஒன்றினை ஏற்பாடு செய்திருந்தனர். அதில் கருத்து தெரிவித்த வடக்கு கிழக்கு  வலிந்து காணாமல்  சங்கத்தலைவி யோகராசாா கனகரஞ்சினி அவர்கள்.

அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல (புலிகள் அமைப்பில் இருந்தவர்கள் காணாமல் போயிருந்தால், அவர்கள் வெளிநாட்டுக்கு சென்றிருப்பார்கள். புலிகளின் குடும்பங்களுக்கு நட்ட ஈடு அல்லது நிவாரணம் வழங்கினால் பயங்கரவாதத்தை ஊக்குவிப்பது போலாகும்) என அண்மையில் தெரிவித்த கருத்திற்கு பதில் கூறியிருந்தார்.

இவர்கள்  அண்மையிலே மட்டுமல்ல நாங்கள் எங்களுடைய உறவுகளை தேடுகின்ற காலந்தொட்டு இன்றுவரை பல முயற்சிகள் எடுத்து வருகின்றனர் இந்த போர்க்குற்றத்தை நிராகரித்து போர்குற்றம் ஒன்று இலங்கையில் நடைபெறவில்லை என்று கூட பேசி வந்தார்கள் போர் குற்றம் இடம் பெற்றமைக்கான ஆதாரம் இல்லை என்று கூட கூறியிருந்தார்கள் ஆனால் யுத்தம் நடந்த பிற்பபாடு கையளித்து காணாமல் ஆக்கப்பட்ட இலங்கை அரசை நம்பி ஒப்படைக்கப்பட்ட எமது பிள்ளைகளுக்கு என்ன நடந்தது என்று  கூறும் பொறுப்பு இந்த அரசுக்கு உள்ளது.

ஆட்சி மாற்றங்கள் வரலாம் அரசு மாறலாம் ஆனால் எங்களுடைய  உறவுகளுக்கான நீதி  வரும் வரைக்கும் நாங்கள் இந்த போராட்டத்தை கைவிடப்போவதில்லை இதை சர்வதேசம் கவனத்தில் கொண்டு இலங்கை அரசிற்கு அழுத்தத்தைக் கொடுத்து  கால அவகாசம் கொடுக்காமல் எங்களுக்கான நீதியை பெற்றுத்தர வேண்டும் என கருத்து தெரிவித்தார். அவர் மேலும் குறிப்பிடுகையில்

வருகின்ற 30 ஆம் திகதி  காணாமல் ஆக்கப்பட்ட எமது பிள்ளைகளுக்கான நீதி வேண்டியும் அவர்களை மீட்டுத்தர வேண்டுடியும் வடக்கு மாகாணத்தில் யாழ்ப்பாணத்தில் மாபெரும் போராட்டம் ஒன்றினை வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட சங்கம் ஏற்பாடு செய்துள்ளது

நாங்கள் எமது வீடுகளில் உட்புகுந்து கடத்தப்பட்டு காணாமல் ஆக்கப்பட்ட எமது பிள்ளைகளை தேடி கொண்டு வருக்கின்றோம்.இதற்கு இலங்கை அரசு எந்த தீர்வும் வழங்காது 14 ஆண்டுகளாக சிரித்துக் கொண்டு இருக்கின்றது.

எங்களுக்கான ஒரு நீதியை இன்று சர்வதேசம் பெற்றுத்தர வேண்டும் அதற்கான இந்த தூய்மையான உன்னதமான இந்த போராட்டத்தை புலம்பெயர் நாடுகளில் இருக்கின்ற எங்களுடைய உறவுகளும் அந்தந்த நாடுகளிலேயே எங்களுக்காக குரல் கொடுக்க வேண்டும்

கிளிநொச்சியிலிருந்து காலை 8 மணிக்கு போராட்டத்துக்கான  வாகனங்கள் புறப்பட தயாராக இருக்கிறது அதில் எங்களுடைய உறவுகள் வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் குடும்பங்கள் அனைவரும் தவறாது வருகைதர வேண்டும்.

அவர்கள் மட்டுமல்ல இங்கே இருக்கின்ற கிராம மட்டத்தில் பல அமைப்புகள் இருக்கின்றன அந்த அமைப்புகளை எல்லோரும் ஒன்றிணைந்து அந்த அமைப்புகளில் ஒரு பத்துப் பத்துப் பேராவது எங்களுக்கு வலு சேர்க்க வேண்டும்

2020 8 30 நடக்கின்ற இந்த காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளின் போராட்டம் சர்வதேசத்திடம் நீதி வேண்டி  யாழ்ப்பாண பேருந்து நிலையத்திலிருந்து கச்சேரி வரைக்கும்  நாங்கள் நடத்துகிறோம்.

அதேபோல கிழக்கு மாகாணத்தில் மட்டக்களப்பு கல்லடிப் பாலத்தில் இருந்து காந்தி பூங்கா வரை வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட உறவுகள் உண்மைக்கும் நீதிக்குமான நடை பயணத்தை ஆரம்பிக்கின்றனர். என ஊடக சந்திப்பின் போது குறிப்பிட்டிருந்தார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

முகநூலில் நாம்