காலி முகத்திடல் போராட்டக்களத்தில் மோதல்: நால்வருக்கு காயம்

காலிமுகத்திடல் போராட்டக் களத்தில் இரு குழுக்களிடையே இடம்பெற்ற மோதலில் நால்வர் காயமடைந்துள்ளனர்.

நேற்றைய தினம் இடம்பெற்ற இந்த சம்பவத்தில் காயமடைந்த நால்வரும் கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக வைத்தியசாலைத் தகவல்கள் தெரிவிக்கின்றன. கொழும்பு – 15 மற்றும் வெல்லம்பிட்டி முதலான பகுதிகளைச் சேர்ந்த 15, 17, 18 மற்றும் 20 வயதுடைய இளைஞர்களே காயமடைந்துள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

முகநூலில் நாம்