
காலிமுகத்திடல் போராட்டத்தின் முன்னணி செயற்பாட்டாளராக இருந்த ரந்திமல்
கமகே கைது செய்யப்பட்டுள்ளார்.
நேற்று (வியாழக்கிழமை) அவர் வெளிநாட்டில் இருந்து நாடு திரும்பிய நிலையில்
கட்டுநாயக்க விமான நிலையத்தில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளார் என பொலிஸ்
ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.
காலிமுகத்திடல் போராட்டக்காலத்தில் இலங்கை ரூபவாஹினி
கூட்டுத்தாபனத்திற்குள் அத்துமீறி நுழைந்த குற்றச்சாட்டின் பேரிலே அவர்
கைது செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.