கார்பந்தயத்தில் வால்டெரி போட்டாஸ் முதலிடம்

பர்முயுலா-1 கார்பந்தயத்தின் துர்கிஷ் கிராண்ட் பிரிக்ஸ் சுற்றில், மெசிடஸ் பென்ஸ் அணியின் வீரரான வால்டெரி போட்டாஸ் முதலிடம் பிடித்துள்ளார்.

ஒவ்வொரு ஆண்டும் ‘பார்முலா 1’ கார் பந்தயம், 23 சுற்றுகளாக நடைபெறும். ஒவ்வொரு சுற்றும் ஒவ்வொரு நாடுகளில் நடைபெறும்.

இதன்படி, நடப்பு ஆண்டின் 16ஆவது சுற்றான துர்கிஷ் கிராண்ட் பிரிக்ஸ், நேற்று இஸ்தான்புல் பார்க் சர்வதேச ஓடுதளத்தில் நடைபெற்றது.

இதில் 309.396 கிலோ மீட்டர் பந்தய தூரத்தை நோக்கி, 10 அணிகளை சேர்ந்த 20 வீரர்கள் காரில் சீறிப்பாய்ந்தனர்.

இதில் மெசிடஸ் பென்ஸ் அணியின் வீரரான வால்டெரி போட்டாஸ், பந்தய தூரத்தை 1 மணித்தியாலம் 31 நிமிடங்கள் 04.103 வினாடிகளில் இலக்கை கடந்து முதலிடத்தை பிடித்தார். இதற்காக அவருக்கு 26 புள்ளிகள் வழங்கப்பட்டது.

அவரை விட 14.584 வினாடிகள் பின்தங்கிய நிலையில், பந்தய தூரத்தை கடந்த, ரெட் புல் அணியின் மேக்ஸ் வெர்ஸ்டபேன் இரண்டாவது இடத்தை பெற்றார். அத்தோடு அவர், இரண்டாம் இடத்திற்கான 18 புள்ளிகளையும் பெற்றுக் கொண்டார்.

33.471 வினாடிகள் பின்தங்கிய நிலையில், பந்தய தூரத்தை கடந்த, ரெட் புல் அணியின் வீரரான செர்ஜியோ பெரெஸ் மூன்றாவது இடத்தை பிடித்தார். அதற்கு அவருக்கு 15 புள்ளிகள் வழங்கப்பட்டது.

இதுவரை நடைபெற்று முடிந்துள்ள பதினாறாவது சுற்றுகளின் முடிவில், ரெட் புல் அணியின் மேக்ஸ் வெர்ஸ்டபேன் ஏழு வெற்றிகளுடன் 262.5 புள்ளிகளுடன் முதலாவது இடத்தில் உள்ளார்.

மெசிடஸ் பென்ஸ் அணியின் வீரரான லீவிஸ் ஹமில்டன் ஐந்து வெற்றிகளுடன் 256.5 புள்ளிகளுடன் முதலிடத்தில் உள்ளார்.

மெசிடஸ் பென்ஸ் அணியின் வீரரான வால்டெரி போட்டாஸ், ஒரு வெற்றியுடன் 177 புள்ளிகளுடன் மூன்றாவது இடத்தில் உள்ளார்.

அடுத்த பதினெழாவது சுற்றான அமெரிக்க கிராண்ட் பிரிக்ஸ், எதிர்வரும்; 25ஆம் திகதி, அமெரிக்காஸ் சர்வதேச ஓடுதளத்தில் நடைபெறவுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

முகநூலில் நாம்