கார்த்திகை விளக்கீட்டுக்கு இராணுவம் இடையூறு – மக்களை அச்சுறுத்தும் வகையில் செயற்பாடு (படங்கள் இணைப்பு)

கார்த்திகை விளக்கீட்டுக்கு இராணுவம் இடையூறு ஏற்படுத்தியதுடன் மக்களை அச்சுறுத்தும் வகையில் செயற்பட்டுள்ளனர்.
கிளிநொச்சி மாவட்டம் பரந்தன் பகுதியில் கார்த்தை விளக்கீட்டுக்காக தீபம் ஏற்றிய வயோதிபத் தம்பதியர் இருவர் இராணுவத்தினரால் மிரட்டப்பட்டு விளக்குகளும் தூக்கிவீச்சப்பட்டதாக சம்மந்தப்பட்டவர்கள் தெரிவித்துள்ளனர்.

வழமைபோல கார்த்திகை விளக்கீட்டிற்காக விளக்குகள் ஏற்றப்பட்டிருந்தன. வீட்டு முற்றத்தில் விளக்குகள் ஏற்றப்பட்டிருந்த நிலையில் வீட்டு வளவின் உள்ளே வந்த இராணுவத்தினர் விளக்குகளை தூக்கிவீசியுள்ளனர்.அதன் பின்னர் வயோதிபரை துப்பாக்கியால் தாக்கவந்தததாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
பரந்தன் இராணுவ முகாமை சேர்ந்தவர்கள் இராணுவ சீருடையில் இவ்வாறு அச்சுறுத்தியதுன் தாக்க முற்பட்டுள்ளதாக பாதிக்கப்பட்டவர்கள் தெரிவிக்கின்றனர்.
இதேவேளை நேற்று பரந்தன் பகுதியில் குறித்த இராணுவத்தினரே ஊடகவியலாளர்களை அச்சுறுத்தியதுடன் ஒளிப்பதிவு செய்த காட்சிகளை அழித்தமையும் குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

முகநூலில் நாம்