காய்ச்சல் அறிகுறிகளுடன் வைத்தியசாலைக்கு வருவோரின் எண்ணிக்கை அதிகரிப்பு

கொரோனா அச்சம் காரணமாக காய்ச்சல் அறிகுறிகளுடன் வைத்தியசாலைக்கு வருவோரின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.

எனினும் இதில் பலர் சில மணித்தியாலங்களில் சிகிச்சையளிக்கப்பட்டு வீடுகளுக்கு திருப்பியனுப்பப்பட்டதாக அமைச்சு குறிப்பிட்டுள்ளது.

இருப்பினும் 30 பேர் வரை தற்போது வரை கண்காணிப்பில் வைக்கப்பட்டுள்ளனர்.

இந்த நிலையில் காய்ச்சல் போன்ற அறிகுறிகள் தென்பட்டால் அச்சம் கொள்ளத் தேவையில்லை.

வீட்டிலேயே தனிமையில் இருக்கமுடியும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

அறிகுறிகள் தீவிரமானால் மாத்திரம் மருத்துவ சிகிச்சைகளை நாடுமாறு சுகாதார அமைச்சு கேட்டுள்ளது.

முகநூலில் நாம்