காமன்வெல்த் மகளிர் கிரிக்கெட்: பாகிஸ்தான் அணியை வீழ்த்தியது இந்திய அணி

பாகிஸ்தானுக்கு எதிரான காமன்வெல்த் மகளிர் டி20 லீக் ஆட்டத்தில், 8 விக்கெட் வித்தியாசத்தில் இந்திய மகளிர் அணி அபார வெற்றிப் பெற்றுள்ளது.

அதிகபட்சமாக ஸ்மிருதி மந்தனா 42 பந்துகளில் 63 ரன்கள் விளாசினார். முன்னதாக ஆடவர் பளுதூக்குதல் 67 கிலோ எடைப்பிரிவில் தங்கப் பதக்கம் வென்றார் இந்திய வீரர் ஜெரிமி லால்ரினுகா. ஜெரிமி லால்ரினுகாவுக்கு 19 வயது. இந்தியாவின் மிசோரம் மாநிலத்தை சேர்ந்தவர்.

இந்தியாவுக்கு கிடைக்கும் இரண்டாவது தங்கப்பதக்கம் இது. இதுவரை இந்தியா மொத்தம் ஐந்து பதக்கங்களை வென்றுள்ளது. பதக்கம் வென்ற ஜெரிமி லால்ரினுகாவுக்கு இந்திய பிரதமர் நரேந்திர மோதி வாழ்த்து தெரிவித்துள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

முகநூலில் நாம்