காமன்வெல்த் பளுதூக்கும் போட்டியில் இந்தியாவுக்கு மூன்றாவது தங்கப் பதக்கம்

காமன்வெல்த் போட்டிகளில் இந்தியாவுக்கு மூன்றாவது தங்கப் பதக்கத்தை பெற்று தந்துள்ளார் 20 வயது பளுதூக்கும் வீரர் அச்சிண்டா செயுலி.

ஆடவர் 73கிலோ எடை தூக்கும் பிரிவில் அச்சிண்டா செயுலி மொத்தம் 313கிலோ எடையை தூக்கி பதக்கம் வென்றுள்ளார்.

நமது இளைஞர் சக்தி வரலாற்றை உருவாக்கிக் கொண்டிருக்கிறது. காமன்வெல்த் போட்டியில் முதல் பதக்கம் வென்றதோடு புதிய சாதனையை படைத்துள்ள ஜெரிமி லால்ரினுகாவுக்கு வாழ்த்துக்கள். அவர் இளம் வயதில் அதீத பெருமையை நாட்டிற்கு சேர்த்துள்ளார். அவரின் எதிர்கால முயற்சிகளுக்கு எனது வாழ்த்துக்கள்.” என பிரதமர் மோதி தனது டிவீட்டில் தெரிவித்துள்ளார்.

முன்னதாக காமன்வெல்த் போட்டியில் 49 கிலோ எடை பிரிவில் மொத்தம் 201 கிலோ எடையை தூக்கி இந்தியாவுக்கு தங்கப் பதக்கம் வென்று கொடுத்தார் பளு தூக்கும் வீராங்கனை மீராபாய் சானு.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

முகநூலில் நாம்