காணாமல் போனோரின் உறவினருக்கு 2 இலட்சம் ரூபா இழப்பீடு

காணாமல் போனமை உறுதி செய்யப்பட்டிருப்பின், காணாமல் போனமைக்கான சான்றிதழை
பெற வேண்டிய தேவை இல்லை என்பதுடன், காணாமற்போனவர்களின் நெருங்கிய
உறவினருக்கு தலா 2 இலட்சம் ரூபா இழப்பீடு வழங்க அமைச்சரவை அனுமதி
வழங்கியுள்ளது.

பதிவாளர் நாயகத்தினால் வழங்கப்படும் காணாமற் போனமைக்கான சான்றிதழை அடிப்படையாகக் கொண்டு, காணாமல் போனவரின் நெருங்கிய உறவினருக்கு தலா ஒரு இலட்சம் ரூபா பணத்தை வழங்க கடந்த மார்ச் மாதம் 14 ஆம் திகதி அமைச்சரவை அனுமதி வழங்கியிருந்தது.

எனினும், சான்றிதழை பெற்றுக்கொள்வதற்கு நீண்ட காலம் செல்வதால், உறவினருக்கு வழங்கப்படும் பணத்தை இரண்டு இலட்சம் ரூபா வரை அதிகரிக்க நேற்று (10) நடைபெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில் அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

நீதி, சிறைச்சாலைகள் விவகாரங்கள் மற்றும் அரசியலமைப்பு மறுசீரமைப்பு அமைச்சரினால் இதற்கான பத்திரம் அமைச்சரவைக்கு சமர்ப்பிக்கப்பட்டது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

முகநூலில் நாம்