காஜல் அகர்வால் திருமணப் புகைப்படங்கள் வெளியானது 

மும்பை நட்சத்திர ஹோட்டலில் நடைபெற்றுவரும் நடிகை காஜல் அகர்வால் திருமண புகைப்படங்கள் வெளியாகியுள்ளன.

நடிகை காஜல் அகர்வால் இயக்குநர் பேரரசுவின் 2008 ஆம் ஆண்டு வெளியான பழனி படத்தில்தான் தமிழில் அறிமுகமானார். பொம்மலாட்டம், பழனி, மோதிவிளையாடு, நான் மகான் அல்ல, மாற்றான், துப்பாக்கி, மெர்சல், ஆல் இன் ஆல் அழகு ராஜா, ஜில்லா, மாரி, விவேகம் என தமிழின் முன்னணி நடிகர்களுடன் நடித்துள்ளார்.

தற்போது, கமல்ஹாசனின் இந்தியன் 2 விலும் நடித்து வருகிறார். இந்தி, தமிழ், தெலுங்கு என மும்மொழிகளில் நடித்து வந்தாலும் காஜல் அகர்வாலை முன்னணி நடிகையாக்கியது ராஜமெளலி இயக்கத்தில் கடந்த 2009 ஆம் ஆண்டு வெளியான மஹதீராதான்.

இப்படம் தமிழிலும் டப் செய்யப்பட்டு வெற்றியடைந்தது குறிப்பிடத்தக்கது. அதிலிருந்து, தமிழ், தெலுங்கு ரசிகர்களின் ப்ரியமான நடிகையாக இருந்த காஜல் அகர்வாலுக்கு தற்போது 35 வயது ஆகிறது. இவரது திருமணம் எப்போது என்று திரையுலகமே ஆவலோடு எதிர்பார்த்திருந்த நிலையில், கடந்த 6 ஆம் தேதி சமூக வலைதளங்களில் தனது திருமணம் குறித்தும் காதலர் கெளதம் கிட்சிலு குறித்தும் முதன்முறையாக அறிவித்தார். அதனைத்தொடர்ந்து, இன்று மாலை அவருக்கு திருமணம் மும்பை நட்சத்திர ஹோட்டலில் நடைபெற்றது.

திருமணத்தில் சிவப்பு மற்றும் சந்தன நிற உடையில் காஜல் அகர்வால் மணப்பெண் கோலத்தில் புன்னகைக்கும் புகைப்படங்களை பார்க்கும்போது வெண்ணிலவே தரையில் உதித்தாய் ஒரு சிரிப்பில் இதயம் பறித்தாய் என்ற பாடல் வரிகள் நம் நினைவுக்கு வருகின்றன. திருமண வாழ்த்துகள் காஜல்!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

முகநூலில் நாம்