காங்கேசன்துறைக்கு இன்று முதல் கடுகதி

இன்று முதல் பிரதி வெள்ளிக்கிழமைகளில், கல்கிஸையிலிருந்து காங்கேசன்துறை நோக்கி குளிரூட்டப்பட்ட முதலாம் வகுப்பு நகர்சேர் கடுகதி ரயில் ஒன்று சேவையில் ஈடுபடவுள்ளது.

10 பெட்டிகளைக் கொண்ட இந்த ரயிலில் 520 ஆசனங்கள் உள்ளதாக ரயில் திணைக்கள பிரதிப் பொது முகாமையாளர் வீ.எஸ்.பொல்வத்தகே தெரிவித்துள்ளார்.

கல்கிஸையில் இரவு 10 மணிக்கு புறப்படும் குறித்த ரயில், அடுத்தநாள் அதிகாலை 5.25க்கு யாழ்ப்பாணத்தை சென்றடைந்து, 5.30க்கு புறப்பட்டு காங்கேசன்துறையை சென்றடையும்.

பின்னர் அந்த ரயில் ஞாயிற்றுக்கிழமைகளில் காங்கேசன்துறையில் இருந்து இரவு 10 மணிக்கு கொழும்பு நோக்கி புறப்பட்டு கல்கிஸையை சென்றடையும்.

குறித்த ரயிலுக்கான பயணக் கட்டணம் 2,800 ரூபாயாகும் என  தெரிவிக்கப்படுகின்றது.


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

முகநூலில் நாம்